அர்ச்சனாவை விடாமல் துரத்தும் பாத்ரூம் டூர்... சனம் செய்த கிண்டல்! லைக்ஸை குவிக்கும் ரசிகர்கள்

அர்ச்சனாவை விடாமல் துரத்தும் பாத்ரூம் டூர்... சனம் செய்த கிண்டல்! லைக்ஸை குவிக்கும் ரசிகர்கள்

வனிதாவிற்கு அடுத்து சர்ச்சைக்கு பெயர் போனவர் என்றால் அது அர்ச்சனாவாக தான் தற்போது இருந்து வருகின்றார்.

வேறொரு ரிவியில் தொகுப்பாளினியாக இருந்து வந்த அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களையும், அவர்களின் வெறுப்பினையும் சம்பாதித்தார்.

இந்நிகழ்ச்சியில் இருக்கும் போது ஏகப்பட்ட நெகட்டிவ் கருத்துகள் வந்த நிலையில், தற்போது யூரியூப் சேனல் ஒன்றினையும் ஆரம்பித்து, அதில் காணொளிகளை பதிவிட்டு வருகின்றார்.

ஆரம்பத்தில் நன்றாக சென்ற இந்த சேனல், சமீபத்தில் பாத்ரூம் டூர் என்று ஒன்றினை அறிமுகப்படுத்தியதிலிருந்து நெட்டிசன்கள் வச்சி செய்கின்றனர்.

நெகட்டிவ் கருத்துக்களை எதிர்பார்த்திருந்தாலும், ஓரளவிற்கு மேல் அவரால் தாங்கமுடியாமல், ஆவேசமாக பதில் காணொளியினை வெளியிட்டு, அதன் இறுதியில் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.

ஆனால் பலரும் இதை கவனித்து வந்த நிலையில், பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற சனம்ஷெட்டி அர்ச்சனாவை கிண்டல் செய்யும் விதமாக பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

ஆயிரத்தெட்டு பிரச்சினை இந்த நாட்டுல, உங்க பாத்ரூம் பிரச்சனையை வெச்சுக்கோங்கம்மா உங்க வீட்டுல என கிண்டலடித்துள்ளார். இந்த பதிவுக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனாவுக்கும் சனம் ஷெட்டிக்கும் சண்டைக்கோழிகளாகவே இருந்துவந்தது அனைவருக்கும் தெரிந்த விடயமே...