
பிரபல இசையமைப்பாளரின் தாயார் மரணம்! பிறந்தநாள் கொண்டாடிய இரு தினங்களில் நிகழ்ந்த சோகம்
பிரபல இசையமைப்பாளரான டி.இமானின் தாயார் இன்று உயிரிழந்துள்ளார்.
விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலம் 2001 ஆண்டு முதல் தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான்.
தொடக்க காலத்தில் இவரது இசை ரசிகர்களை கவராமல் இருந்தாலும், கும்கி நல்ல பெயரை எடுத்துக் கொட்டது.
தொடர்ந்து ஹிட் பாடல்களை இசையமைத்து வரும் இமானின் தாயார், இன்று உயிரிழந்துள்ளார்.
இதை அவரே டுவிட்டரில் உறுதிபடுத்தியுள்ளதுடன், மிக உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அதில், மே 23ம் தேதி தனது தாயின் பிறந்தநாள் என்றும், இரண்டு தினங்களில் அவர் மரணடைந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2008ம் ஆண்டு தாயார் கோமா நிலையில் இருந்த போது, பிறந்தநாள் கொண்டாடியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.
Rest In Peace Amma. pic.twitter.com/bn2ddcuHfn
— D.IMMAN (@immancomposer) May 25, 2021