
நானும் அந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவள் தான்! பிக்பாஸ் ஜீலியின் உருக்கமான பதிவு
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத்தமிழச்சி என புகழப்பெற்றவர் தான் ஜீலி, அதன்பின்னர் பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு பெரும்பாலான ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார்.
ஓவியா விஷயத்தில் இவர் பொய் கூறியது அம்பலமாகவும், ஒட்டுமொத்த ஓவியா ஆர்மியின் கோபத்துக்கு ஆளானார்.
தொடர்ந்து இவர் எதை செய்தாலும், மிக அசிங்கமாக பேசுவதற்கென்று ஒரு கூட்டமே இருந்தது.
ஆனால் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தன்னுடைய வேலையில் படுபிஸியாக இருக்கிறார் ஜீலி.
எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜீலி, அவ்வப்போது போட்டோஷீட் படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் இவரின் இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது, அதில் மிகச்சிலரே தனிமையிலிருந்தும், வெறுப்புகளில் இருந்து தப்பிக்கின்றனர், நானும் அதனால் பாதிக்கப்பட்டவள் தான்.
உங்களுக்கும் அதேபோன்றதொரு பிரச்சனை ஏற்படும் வரை, அதனால் ஏற்படும் வலியை உணரமாட்டீர்கள் என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவுக்கு பலரும், வாழ்த்துக்கள் ஜீலி, அடுத்தடுத்து உங்கள் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள், எதையும் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள் என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.