சர்ச்சைக்குரிய அந்த 2 நிமிட காட்சி...! லீக் செய்து வெளுத்து வாங்கிய பிக் பாஸ் பாலாஜி! ஷாக்கான ரசிகர்கள்

சர்ச்சைக்குரிய அந்த 2 நிமிட காட்சி...! லீக் செய்து வெளுத்து வாங்கிய பிக் பாஸ் பாலாஜி! ஷாக்கான ரசிகர்கள்

பிரபல யூடியூப் சேனலான பிஹைண்ட்வுட்ஸ் பாலாஜி முருகதாஸுக்கு அண்மையில் விருது வழங்கி கௌரவித்தது.

அப்போது விழா மேடையில், பிக் பாஸ் போட்டியாளர்களை மிகவும் மோசமாக விமர்சனம் செய்ய வேண்டாம் என்கிற கோரிக்கையை முன் வைத்து பேசி இருந்தார்.

அந்த காட்சியை குறித்த யூட்டிப் ஒளிபரப்பு செய்யவில்லை. இந்நிலையில் விருதை திருப்பித் தருவதாக பாலா அறிவித்து அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

அந்த விழாவில் நான் ஏதும் தப்பா பேசல, தன்னை போன்ற பிக் பாஸ் பிரபலங்களை காலி பண்ணும் நோக்கில் விமர்சிக்காதீங்க, இது எதிர்கால போட்டியாளர்களையும் பாதிக்கும்.

மற்றும் விமர்சிக்கும் அனைவரும் மகாத்மா காந்தியோ, அன்னை தெரசாவோ இல்லை என வெளுத்து வாங்கி உள்ளார்.

மேலும், இதுதான் அந்த நிகழ்ச்சியில் தான் பேசிய வீடியோ, இதைத்தான் அவர்கள் கட் செய்து விட்டனர் என ரசிகர் ஒரு செல்போன் கேமராவில் எடுத்த வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டு வைரலாக்கி உள்ளார் பாலாஜி முருகதாஸ்.