ரிலீஸ் பிளானை மாற்றிய ‘பார்டர்’ படக்குழு

ரிலீஸ் பிளானை மாற்றிய ‘பார்டர்’ படக்குழு

அறிவழகன் இயக்கத்தில் உருவாகி உள்ள பார்டர் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ஸ்டெபி பட்டேல் நடித்துள்ளார்.

 

‘குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர் அறிவழகனும் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ள படம் ‘பார்டர்’. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள். விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த சமயத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் இப்படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

 

பார்டர் படத்தின் போஸ்டர்

பார்டர் படத்தின் போஸ்டர்

 

தற்போது கொரோனா பரவல் குறையத் தொடங்கி உள்ளதால், ஜூலை மாதத்தில் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பார்டர் படத்தை ஓடிடி-யில் வெளியிடும் முடிவை படக்குழு கைவிட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.