நேற்றிரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்...

நேற்றிரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்...

நேற்று இரவு 10.00 மணியிலிருந்து அதிகாலை 4.00 மணி வரை தினமும் நாடு முழுவதும் ´தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம்´ மறு அறிவித்தல் வரையில் அமுல்படுத்தப்படுமென கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்திருந்தார்.

இதற்கமைவாக தற்போது அமுல்படுத்தப்படும் ´தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்ட´ காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளுக்கான பயணங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையில் ஓர் அங்கமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று (17) நள்ளிரவு முதல் திருமண வைபவங்களுக்கு தடை விதிக்கப்பட்டள்ளன. எனினும் திருமண பதிவுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

திருமண தம்பதியர், அவர்களது பெற்றோர், சாட்சிகள் மற்றும் பதிவாளர் ஆகியோரின் பங்கேற்புடன் திருமணப் பதிவுகளை வீடுகளில் நடத்தலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.