குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 2 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 901 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் மீதமுள்ள கடற்படையினர் 5பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 697 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025