ஸ்ரீலங்காவில் அதிரவைக்கும் துஷ்பிரயோக புள்ளிவிபரம்!
ஸ்ரீலங்காவில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் ஒவ்வொரு நாளும் குறைந்தது நான்கு பெண்கள் பாலியல் துஷ்பிரயோக்திற்கு உட்படுத்தப்படுவதாகவும் குற்றம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் மாத்திரம் 5, 292 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்காவில் கடந்த ஆண்டு ஆறு மணித்தியாலத்திற்கும் ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு 1, 642 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமையவே இந்த தகவல்கள்அமைந்திருப்பதாக கூறியுள்ள அவர், மேலும் இதுபோன்ற சம்பவங்கள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்படாத ஒரு போக்கு நாட்டில் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ள இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
44 பொலிஸ் பிரிவுகளில் 44 பிரதேச பணியக பிரிவுகள் காணப்படுவதுடன், அவைகள் தொடர்ந்தும் செயற்பாட்டிலேயே இருப்பதாகவும் துஷ்பிரயோகம் தொடர்பில் மாத்திரமன்றி, துஷ்பிரயோக சம்பவங்களுக்கு இணையான சம்பவங்கள் தொடர்பிலும் முறைப்பாடு செய்ய முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தடன் நாட்டின் எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் காணப்படுவதாகவும் அவர் தேரிவித்துள்ளார்.
க டந்த ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சுமார் 8,500 முறைப்பாடுகள் தமக்கு கிடைத்ததாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரன ஜூன் மாதம் அறிவித்திருந்தார். இந்த ஆண்டு ஜூன் 12ஆம் திகதிவரை சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சுமார் 3, 500 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.