வவுனியாவில் ஹெரோயினுடன் இளைஞன் கைது!

வவுனியாவில் ஹெரோயினுடன் இளைஞன் கைது!

வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியில் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியில் போதைப்பொருள் வியாபாராம் முன்னெடுக்கப்படுவதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினருக்கு இராணுவத்தினரால் தகவல் வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் நேற்றயதினம் இரவு அப்பகுதிக்கு சென்ற பொலிசார் அதே பகுதியை சேர்ந்த 23வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர்.

அவரிடமிருந்து 16கிராம்40 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர்