தென்னிலங்கையில் கார் மீது துப்பாக்கி சூடு!

தென்னிலங்கையில் கார் மீது துப்பாக்கி சூடு!

கிரியுல்ல பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை பன்னலவில் இருந்து கிரியுல்ல நோக்கி பயணித்த கார் மீதே இவ்வாறு பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இது தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய வீதி தடைகளை ஏற்படுத்திய பொலிஸார் தீவிர சோதனைகளை முன்னெடுத்தனர்.

இதனால் காரில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயமேற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.