மீண்டும் வெடிக்கவுள்ள மாபெரும் மக்கள் போராட்டம் - வெளியான எச்சரிக்கை!

மீண்டும் வெடிக்கவுள்ள மாபெரும் மக்கள் போராட்டம் - வெளியான எச்சரிக்கை!

எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதியன்று மீண்டும் கொழும்பில் தேர்தலை நடத்தக்கோரி மாபெரும் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனை தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டுள்ளதால், தற்போதைய அரசியல் அமைப்பை மாற்ற விரும்பும் ஆயிரக்கணக்கான மக்களால் வெள்ளம் கொழும்பில் பாய்வதற்கு முன்னர் ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம் மற்றும் கம்பஹா ஆகிய இடங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத்தேர்தல், மாகாணசபைத் தேர்தல் ஆகியவற்றை நடத்தாமல் அரசாங்கம் அடுத்தவருடம் அதிபர் தேர்தலை நடத்துவதில் குறியாக உள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.