14 வயதில் புர்ஜ் கலிஃபாவில் சொந்த நிறுவனம் - மெய்சிலிர்க்க வைக்கும் சாதனைகள்

14 வயதில் புர்ஜ் கலிஃபாவில் சொந்த நிறுவனம் - மெய்சிலிர்க்க வைக்கும் சாதனைகள்

துபாயில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில், ‘மெங்கோ இன்ஜின்’ (Mengo Engine) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை 14 வயது சிறுவன் ஒருவர் ஆரம்பித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஜெயினம் ஜெயின் என்ற 14 வயது சிறுவன், புர்ஜ் கலிஃபாவின் 141வது மாடியில் தனது ஏஐ ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

 

14 வயதில் சாதனைகள்

சிறுவயதிலிருந்தே தொழில்முனைவில் ஆர்வம் கொண்டிருந்த அவர், 6 வயது முதல் தனது தந்தையுடன் இணைந்து வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 வயதில் புர்ஜ் கலிஃபாவில் சொந்த நிறுவனம் - மெய்சிலிர்க்க வைக்கும் சாதனைகள் | Own Company In Burj Khalifa At 14

அவரது திறமையை நம்பி பல நிறுவனங்கள் அவருடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அவர் உருவாக்கிய கண்டுபிடிப்புகளுக்காக ஏற்கனவே இரண்டு காப்புரிமைகள் (Patents) பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் மூன்று காப்புரிமைகளுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி, உலகளவில் பிரபலமான TEDx மேடையில் உரையாற்றியுள்ள ஜெயினம் ஜெயின், தனது சொந்த புத்தகத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார்.