பொலிஸ் அதிகாரிகள் 17 பேருக்கு கொடுக்கப்பட்ட உத்தரவு!
சேவையின் நிமித்தம் தேர்தல் ஆணைக்குழு மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் 17 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் அனுராதபுரம் வலயத்திற்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி விஜித்த அல்விஸ் உட்பட பொலிஸ் அத்தியட்சகர், பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் இருவருக்கும், ஒன்பது உப பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும், நான்கு பொலிஸ் பரிசோதகர்களுக்கும், இரு பிரதி பொலிஸ் பரிசோதகர்களுக்கும் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் தீவிரவாத ஒழிப்பு மற்றும் விசாரணை பிரிவின் உதவி பொலிஸ் அதிகாரி எம்.ஆர் நூறுதீன் பொலிஸ் விசேட பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.