புதிய அரசியலமைப்பிற்கு 2/3 பெரும்பான்மை வேண்டும் – பந்துல
நாட்டு மக்களைப் பாதுகாக்கும் ஒரு அரசியலமைப்பை அறிமுகப்படுத்த பொதுத் தேர்தலில் அரசாங்கத்திற்கு முழுப் பலத்தினை வழங்குமாறு அமைச்சர் பந்துல குணவர்தன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தம்புள்ளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை எனக் கூறினார்.
அனைத்து சமூகமும் அவர்கள் விரும்பும் இடத்தில் அச்சமின்றி வாழ முடியும் என்பதையும், ஓகஸ்ட் 5 தேர்தலுக்குப் பின்னர் வேலைவாய்ப்பில் ஈடுபடுவதற்கும் அவர்களின் கலாச்சாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றும் பந்துல குணவர்தன உறுதியளித்தார்.
எனவே பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறும் பந்துல குணவர்தன பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை 2020 ஆம் ஆண்டில் நவீன வசதிகளுடன் கூடிய 1,000 பாடசாலைகள் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.