கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மேலும் 7 பேர்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 7 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2048ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2730ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு இதுவரையில் 671 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.