தேர்தல்கள் தொடர்பில் 224 முறைப்பாடுகள் பதிவு- காவல்துறை ஊடகப்பிரிவு

தேர்தல்கள் தொடர்பில் 224 முறைப்பாடுகள் பதிவு- காவல்துறை ஊடகப்பிரிவு

தேர்தல் ஆணைக்குழுவுக்கு பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரையில் 224 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மூன்று வேட்பாளர்கள் மற்றும் 223 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு 64 வாகனங்களையும் காவல்துறையினர் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்நிலையில் பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று மாலை 4 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த 13ஆம் திகதி முதல் குறித்த தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் ராஜாங்கனை பிரதேசத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் குறித்த பிரதேச செயலக பிரிவில் இடைநிறுத்தப்பட்டுள்ள தபால்மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு இன்று வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.