நுவரெலியாவில் கத்திக் குத்து - ஒருவர் படுகாயம்..!

நுவரெலியாவில் கத்திக் குத்து - ஒருவர் படுகாயம்..!

நுவரெலியா பிரதான நகரில் இன்று(8) இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நுவரெலியா பிரதான நகரில் நடைபாதையில் பழங்கள் விற்பனை செய்யும் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், இந்த கத்திக் குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த நுவரெலியா பம்பரகலை தோட்டத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஆறுமுகம் ஹாரியதாஸ் என்ற நபர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் கத்தியால் குத்திய நபர் தானாகவே நுவரெலியா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்