
68 வயதில் துவிச்சக்கர வண்டியில் இலங்கையை சுற்றி வந்தவருக்கு கௌரவிப்பு.
68வது வயதில் துவிச்சக்கர வண்டியில் இலங்கையை சுற்றி வந்த வைத்திலிங்கம் கைலைநாதனை கௌரவிக்கும் நிகழ்வொன்று யாழில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி - சுழிபுரம் மூலக் கிளையின் அலுவலகத்தில் நேற்றைய தினம் (24.07.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்த நிகழ்வினை தொடர்ந்து இறைவணக்கம், வரவேற்பு நடனம், விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றுள்ளன.
பரிசில் வழங்கி கௌரவிப்பு
இதன்போது நிகழ்வின் வைத்திலிங்கம் கைலைநாதனுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் விசாகப்பெருமாள் உமாபதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன், காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பாலச்சந்திரன், கிராம மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், இலங்கை தமிழரசு கட்சியின் சுழிபுரம் மூலக் கிளையின் உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.