
யாழில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி: விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார்.
யாழ்.தென்மராட்சி மட்டுவில் வடக்கு பகுதியிலுள்ள வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி இறந்த நிலையில் மீக்கப்பட்டுள்ளார்.
சடலம் நேற்றையதினம் மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற மூதாட்டி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறி்த்த மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் கொண்டு வருகின்றனர்.