அச்சுவேலி வல்லை இந்துமயான பகுதியில் தீ விபத்து.
யாழ்ப்பாணம் - அச்சுவேலி வல்லை இந்து மயான களப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அச்சுவேலி பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற மரண சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது இளைஞர்களினால் வீசப்பட்ட பட்டாசு வெடி புற்தரையில் விழுந்து தீப்பற்றிக்கொண்டுள்ளது.
இதனால் குறித்த பகுதியின் பெரும்பாலான பற்றைக்காடுகள் தீயில் கருகி நாசமாகியுள்ளன.
இது தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய பிரதேச சபை பணியாளர்கள் மூலம் தீப்பரவல் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025