
யாழ்ப்பாணத்தில் விசமிகளின் நாசகார செயல் - ஒரே நாளில் 4 தேவாலயங்களில் கைவரிசை.
யாழ் - ஆனைக்கோட்டையில் நான்கு தேவாலயங்களில் மாதா சிலைகள் இனம் தெரியாத நபர்களால் நேற்றிரவு(27) சேதமாக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள நான்கு தேவாலயங்களில், இந்த நாசகார செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.