யாழில் கோவில் உண்டியல்களை உடைத்து பணம் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது.

யாழில் கோவில் உண்டியல்களை உடைத்து பணம் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது.

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நான்கு கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணம் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

உண்டியல் உடைத்து திருடப்பட்ட ஆலயங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார் , சந்தேகநபரை அடையாளம் கண்ட நிலையில் , நேற்று (30.07.2023)  யாழ்.நகர் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

யாழில் கோவில் உண்டியல்களை உடைத்து பணம் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது | Breaking Temple Bills And Stealing Money Jaffna

குறித்த திருட்டு சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுதுமலை அம்மன் கோவில் , பிள்ளையார் கோவில் , வைரவர் கோவில் என நான்கு கோவில்களில் இடம்பெற்றுள்ளது.  

கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் , கைது செய்யப்பட்ட நபரிடம்  ஒரு தொகை உண்டியல் பணத்தை மீட்டுள்ளதாகவும் , குறித்த நபர் யாழ். நகர் பகுதியில் உள்ள ஆலய உண்டியல்களை உடைத்து திருடிய குற்றத்தில் நீதிமன்றினால் 03 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு , அண்மையில் தான் சிறையில் இருந்து விடுதலையாகி இருந்தார் எனவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.