
யாழில் பிரபல பாடசாலைக்கு அருகில் விஷமிகள் செய்த நாச செயல்!
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு அருகில் மத்தியூஸ் வீதியில் நாட்டப்பட்டிருந்த நிழல்தரும் மரங்கள் சில விஷமிகளால் சேதமாக்கப்பட்டு முறிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு நேரம் கூடிய விஷமிகள் மதுபோதையில் நிழல்தரும் மரங்களை முறித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்பட்ட குறித்த பகுதியில் நிழல்தரும் மரங்கள் லயன்ஸ் கழகத்தின் பங்களிப்புடன் நாட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.