கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய யாழ்ப்பாண தம்பதி.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய யாழ்ப்பாண தம்பதி.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இளம் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளார்.

போலி ஆவணங்கள் மூலம் இத்தாலி செல்ல முற்பட்ட வேளையில் விமான நிலையத்தின் முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம், சங்கானைப் பிரதேசத்தில் வசிக்கும் இளம் தம்பதியினரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய யாழ்ப்பாண தம்பதி | Young Couple Arrested In Katunayake Airport

 

குறித்த தம்பதி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இவர்களின் பயணப்பொதிகளை சோதனையிட்டபோது, பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்ட இரண்டு கடவுச்சீட்டுகளும் போலி வீசாவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தம்பதியினர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.