யாழில் அலைபேசிகளை திருடிய மூவர் விளக்கமறியலில்!!

யாழில் அலைபேசிகளை திருடிய மூவர் விளக்கமறியலில்!!

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பல தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டின் கீழ் மூவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று(02.08.2023) மேற்கொள்ளப்பட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட மூவரும் பல்லசுட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாழில் அலைபேசிகளை திருடிய மூவர் விளக்கமறியலில் | Three Arrested For Stealing Mobile Phones

இந்நிலையில் விசாரணையின்போது அவர்கள் கைப்பேசிகளை திருடியதை ஒத்துக்கொண்டுள்ளனர். 

மேலும் சந்தேகநபர்கள் நேற்று மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவேளை, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்சியாக இடம்பெற்ற வண்ணம் இருப்பதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.