யாழில் வாகன மோசடியில் கைதான இருவருக்கு விளக்கமறியலில்!!

யாழில் வாகன மோசடியில் கைதான இருவருக்கு விளக்கமறியலில்!!

யாழில் வாகன மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும், மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான குழுவினரே கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த நபரொருவர் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து முச்சக்கரவண்டியொன்றை கொள்வனவு செய்துள்ளார்.

யாழில் வாகன மோசடியில் கைதான இருவருக்கு விளக்கமறியலில் | Three Arrested For Car Fraud In Jaffnaஇவ்வாறு கொள்வனவு செய்தவர் யாழ். மாவட்டச் செயலகத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகனத்தின் புத்தகத்தை மாற்றுவதற்காகச் சென்றபோது வாகனத்தின் தகவல்கள் மற்றும் இதர ஆவண விடயங்களில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள், இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும், மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறையிட்டுள்ளனர்.

இதன் காரணமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வாகனத்தின் புத்தகம் போலியானது என்பது தெரியவந்தது. 

அத்துடன், மோட்டார் சைக்கிளின் இயந்திரக் குறியீடுகளை முச்சக்கரவண்டிக்கு மோசடியாகப் பாவித்துள்ளமை கண்டறியப்பட்டது.

யாழில் வாகன மோசடியில் கைதான இருவருக்கு விளக்கமறியலில் | Three Arrested For Car Fraud In Jaffna

இதையடுத்து நல்லூரைச் சேர்ந்த நபர் கைதுசெய்யப்பட்டார். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், வாகனத்தை விற்பனை செய்த கிளிநொச்சி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மருதங்கேணியைச் சேர்ந்த பிறிதொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சந்தேகநபர்கள் மூவரும் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டதையடுத்து நல்லூரைச் சேர்ந்த நபர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் ஏனைய இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.