யாழில் விபத்தில் சிக்கி பல்கலைக்கழக கல்லூரி மாணவன் உயிரிழப்பு.

யாழில் விபத்தில் சிக்கி பல்கலைக்கழக கல்லூரி மாணவன் உயிரிழப்பு.

யாழ்ப்பாணம் - ஆனைப்பந்தி பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த யாழ். பல்கலைக்கழக கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் (05.08.2023) சனிக்கிழமையன்று, நுவரெலியாவை சேர்ந்த 22 வயதுடைய கருப்பையா பிரதீசன் எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.

யாழில் விபத்தில் சிக்கி பல்கலைக்கழக கல்லூரி மாணவன் உயிரிழப்பு | School Boy Accident Death In Jaffna

கடந்த வியாழக்கிழமை (03.08.2023) ஆனைப்பந்தி சந்தியில் மாணவன் பயணித்த மோட்டார் சைக்கிளும், மற்றுமொரு வாகனமும் மோதி விபத்துக்கு உள்ளானதில் மாணவன் படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

குறித்த மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.