யாழில் பாடசாலை மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்! நீதிவான் விடுத்த உத்தரவு.

யாழில் பாடசாலை மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்! நீதிவான் விடுத்த உத்தரவு.

யாழ்ப்பாணம்  - அனலைதீவு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயது மாணவியிடம் ஆசிரியர் ஒருவரால் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் கடந்த ஜூலை 31ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

யாழில் பாடசாலை மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்! நீதிவான் விடுத்த உத்தரவு | Teacher Sexually Harassed A Schoolgirl In Jaffna

இது தொடர்பில் அந்த மாணவியால் பாடசாலை நிர்வாகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், இதனை அந்த பாடசாலையின் நிர்வாகத்தினர் வெளியே தெரியாமல் மூடி மறைப்பதற்கு முயற்சித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊர்காவற்துறை மற்றும் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி அமைப்பாளர் சதாசிவத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது.

யாழில் பாடசாலை மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்! நீதிவான் விடுத்த உத்தரவு | Teacher Sexually Harassed A Schoolgirl In Jaffna

அதனடிப்படையில் சதாசிவம் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைவாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து நேற்று முன்தினம் (04-08-2023) அந்த ஆசிரியரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்து, நேற்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்திய போது குறித்த ஆசிரியருக்கு பிணையில் செல்வதற்கு நீதிவான் அனுமதி அளித்துள்ளது.