தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்: சாரதியால் உயிரிழந்த குடும்பப் பெண்!

தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்: சாரதியால் உயிரிழந்த குடும்பப் பெண்!

குடும்பப் பெண்ணொருவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்ல இருந்த நிலையில் அவர் மீது மரம் முறிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் மீசாலையில் நேற்றைய தினம் (05-08-2023) இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்: சாரதியால் உயிரிழந்த குடும்பப் பெண்! | Jaffna Accident Woman Dies Due To Driver S Sleep

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண் கடந்த ஜூலை 20ஆம் திகதி மீசாலை பகுதியிலிருந்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தார்.

இதன்போது வவுனியாவில் இருந்து வந்த கார் ஒன்று துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் மீது மோதி, அதன்பின்னர் அருகில் நின்ற மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்: சாரதியால் உயிரிழந்த குடும்பப் பெண்! | Jaffna Accident Woman Dies Due To Driver S Sleepஇந்த விபத்தின் போது முறிந்த மரமானது அங்கு பேருந்துக்காககாத்திருந்த பெண்ணின் மீது விழுந்துள்ளது.

இந்த நிலையில் படுகாயமடைந்த அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் மீசாலை பகுதியை சேர்ந்த 56 வயதான மகேஷ்வரன் நவரஞ்சிதம் என்ற 4 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்: சாரதியால் உயிரிழந்த குடும்பப் பெண்! | Jaffna Accident Woman Dies Due To Driver S Sleepமேலும் இந்த விபத்து சாரதியின் தூக்க கலக்கத்தினாலே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.