தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்.

எதிர்வரும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாத்தறை மாவட்ட மாணவர்களுக்கு பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் அதுகுறித்து ஒக்டோபர் 14 ஆம் திகதிக்கு முன்னர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல் | Notification By Students Class 5 Scholarship Exam

அம் மாவட்ட பரீட்சைதாரர்கள் தங்களது பிரச்சினைகளை அறிவிக்க 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 0412 234 134 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்க முடியும்.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.