கொழும்பு கோடீஸ்வர வர்த்தகர் வீட்டில் பெரும் கொள்ளை சம்பவம்

கொழும்பு கோடீஸ்வர வர்த்தகர் வீட்டில் பெரும் கொள்ளை சம்பவம்

கொழும்பு - தெஹிவளை, களுபோவில பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து ஒரு கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் தெஹிவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோடீஸ்வர வர்த்தகர் வீட்டில் பெரும் கொள்ளை சம்பவம் | Major Robbery At The Home Colombo Millionaireகைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்குச் சொந்தமான போதைப்பொருட்களை பல்வேறு பிரதேசங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து பல தங்க நகைகள் மற்றும் 11 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.