தமிழர் பகுதியில் வசமாக சிக்கிய மோசமான ஜோடி; பொலிசார் வரும்வரை வீட்டுக்குள் வைத்துபூட்டிய மக்கள்!

தமிழர் பகுதியில் வசமாக சிக்கிய மோசமான ஜோடி; பொலிசார் வரும்வரை வீட்டுக்குள் வைத்துபூட்டிய மக்கள்!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவனும், மனைவியும் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிறைந்துறைச்சேனை 2 ஆம் குறுக்கு வீதியிலுள்ள வீடொன்றில் கணவனும், மனைவியும் இணைந்து சூட்சுமமான முறையில் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.

தமிழர் பகுதியில் வசமாக சிக்கிய மோசமான ஜோடி; பொலிசார் வரும்வரை வீட்டுக்குள் வைத்துபூட்டிய மக்கள்! | A Bad Couple Caught Valaichenai People Lockedஇதனை அவதானித்த பிரதேச மக்கள் போதைப்பொருள் வாங்க வந்த நபரை மடக்கிப் பிடித்ததுடன், வீட்டில் இருந்த கணவனும், மனைவியும் வீட்டை விட்டு தப்பிச் செல்லாத வகையில் வீட்டு நுழைவாயிலுக்குப் பூட்டுப் போட்டு அவர்களை சுமார் 10 மணிநேரமாக பிடித்துவைத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்ததக்கமைய பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் சம்பவ இடத்துக்கு சென்று கணவன், மனைவி இருவரையும் கைது செய்துள்ளனர்.

தமிழர் பகுதியில் வசமாக சிக்கிய மோசமான ஜோடி; பொலிசார் வரும்வரை வீட்டுக்குள் வைத்துபூட்டிய மக்கள்! | A Bad Couple Caught Valaichenai People Lockedஅதேவேளை  குறித்த பகுதியில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த பிரதேச மக்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.