
வட மாகாண கல்வி அமைச்சின் அதிபர் நியமனத்தில் முறைகேடு
வட மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அதிபர் நியமனத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சிவசேன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த விடயத்தை இன்று (14-08-2025) நடந்த ஊடக சந்திப்பில் சிவசேன அமைப்பினுடைய சைவ புலவர் என்.பீ. ஸ்ரீந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி புனித பெண்கள் திரேசா பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிபர் நியமனத்திற்கு விண்ணப்பம் செய்யாத அதிபர் ஒருவரை நியமித்துள்ளமை ஒரு முறைகேடான விடயம்.
இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்ல பட்டுள்ளதாகவும் இதற்கு தீர்வு கிடைக்காத விடத்து தாங்கள் இதற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க இருப்பதாகவும் என்.பீ. ஸ்ரீந்திரன் தெரிவித்துள்ளார்.