முதல் அரையாண்டில் அரச வருமானம் வெகுவாக அதிகரிப்பு

முதல் அரையாண்டில் அரச வருமானம் வெகுவாக அதிகரிப்பு

முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம், அண்மையில் நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த அறிக்கையில மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 1,860.6 பில்லியனாக இருந்த அரச வருமானம், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 24.8% அதிகரித்து 2,321.7 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது.

முதல் அரையாண்டில் அரச வருமானம் வெகுவாக அதிகரிப்பு | Sri Lankan Government Revenue Increases 2025

இந்த அரச வருமான உயர்வுக்கு வரி வருமானம் பிரதான பங்களிப்பை வழங்கியுள்ளது.

அதற்கமைய, 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் வரி வருமானம் 2,151.1 பில்லியன் ரூபாவாக 25.9% அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் அரையாண்டில் அரச வருமானம் வெகுவாக அதிகரிப்பு | Sri Lankan Government Revenue Increases 2025

இது கடந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் 1,709.3 பில்லியன் ரூபாயாக காணப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி வருமான அதிகரிப்புக்கு மோட்டார் வாகனங்களுக்கான உற்பத்தி வரி வருமானம், பெறுமதி சேர் வரி வருமானம், சுங்க இறக்குமதி வரிகள், வருமான வரி, விசேட வணிகப் பொருட்கள் மீதான வரிகள், சமூகப் பாதுகாப்பு வரிகள், பெற்றோலியப் பொருட்கள் மூலம் கிடைத்த வரிகள், மதுவரி வருமானம் மற்றும் செஸ் வரி போன்ற பல காரணிகள் முக்கியமாகப் பங்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.