கிளிநொச்சியில் கோர விபத்து: மூவர் படுகாயம்
கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற காரும் மற்றும் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த டிப்பருமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில், டிப்பர் சாரதியும் மற்றும் காரில் பயணித்தவர்களும் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தநிலையில், 38 வயதுடைய தமிழ்செல்வன் கதிர் (டிப்பர்), 63 வயதுடைய வேலாயுதம் சர்வேந்தன் (கார்) மற்றும் 20 வயதுடைய ஜெகன் மனுசன் (கார்) ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.