இலங்கையின் கோடீஸ்வர தொழிலதிபர் அதிரடி கைது ; பெரும் அதிர்ச்சி கொடுத்த பின்னணி

இலங்கையின் கோடீஸ்வர தொழிலதிபர் அதிரடி கைது ; பெரும் அதிர்ச்சி கொடுத்த பின்னணி

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் மண்டினு பத்மசிறி எனப்படும் கெஹெல் பத்தர பத்மேவுக்குச் சொந்தமான நவீன கைத்துப்பாக்கியை வைத்திருந்ததற்காக கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

செக் குடியரசில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கிக்கு மேலதிகமாக, 13 தோட்டாக்கள் மற்றும் ஒரு மெகசினும் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் கோடீஸ்வர தொழிலதிபர் அதிரடி கைது ; பெரும் அதிர்ச்சி கொடுத்த பின்னணி | Srilankas Billionaire Trader Dramat Carrest

புதுக்கடை நீதிமன்றத்தின் கூண்டுக்குள் பெப்ரவரி 19 ஆம் திகதி அன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்குப் பின்னால் மூளையாக செயல்பட்ட கெஹெல் பத்தர பத்மே, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டார்.

மேலும், தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் கோடீஸ்வர தொழிலதிபர் மினுவங்கொடையில் உள்ள ஒரு சொகுசு வீட்டு வளாகத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.