போக்குவரத்து அமைச்சின் அதிரடி ; கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்கள்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, இந்த வாரத்தில் நான்கு முன்னணி கட்டிட ஒப்பந்ததாரர்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி மூன்று ஆண்டுகள் முதல் ஆறு மாதங்கள் வரையிலான காலத்திற்கு அந்த ஒப்பந்தக்காரர்கள் கேள்விப்பத்திர விடயங்களில் பங்கேற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறையில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அறிக்கையின்படி, மத்திய அதிவேகப்பாதை திட்டத்தின் பிரிவு 3 இன் கீழ் ஒரு இலாபகரமான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக மூன்று நிறுவனங்கள் தவறான தகவல்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது.