பேராதனையில் மண்சரிவு, பலர் பலி ; பல்கலைக்கழகத்திலும் பெரும் சேதம்
சீரற்ற வானிலை காரணமாகக் பேராதனை, சரசவிகம பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில், பலர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த மண்சரிவினால் 10 வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ளன. இதன் காரணமாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் பேராதனை பல்கலைக்கழகத்தின் பெரும்பகுதி நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், தொடர்ச்சியாக ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பல்கலைக்கழகத்தின் விடுதிகள் உள்ளிட்ட பல கட்டடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
அத்துடன் பலத்த காற்று காரணமாக கட்டடங்களில் உள்ள தளபாடங்களும் தூக்கி வீசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.