வவுனியால் மனைவியை கொலை செய்துவிட்டு கழுத்தை அறுத்துக் கொண்ட கணவன்

வவுனியால் மனைவியை கொலை செய்துவிட்டு கழுத்தை அறுத்துக் கொண்ட கணவன்

வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவேப்பன்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அதிகாலை முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் கருவேப்பன்குளம் பகுதியை சேர்ந்த 37 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப தகராறு காரணமாக உயிரிழந்த பெண்ணின் கணவரால் இந்தக் கொலை செய்யப்பட்டதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மனைவியை கொலை செய்த பின்னர் கணவரும் கழுத்தை அறுத்துக் கொண்டதாகவும், காயங்களுடன் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியால் மனைவியை கொலை செய்துவிட்டு கழுத்தை அறுத்துக் கொண்ட கணவன் | Man Killed His Wife In Vawuniya

சம்பவம் குறித்து ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.