தள்ளாத வயதில் மனைவிக்கு நிகழ்த்தப்பட்ட சம்பவம் ; 84 வயது கணவனின் கொடூரம்

தள்ளாத வயதில் மனைவிக்கு நிகழ்த்தப்பட்ட சம்பவம் ; 84 வயது கணவனின் கொடூரம்

அகலவத்தை, தெல்பாவத்த பகுதியில் நேற்று (1) காலை கணவனின் தாக்குதலில் அவரது மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் தெல்பாவத்த, மககம பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் என குறிப்பிடப்படுகின்றது.

தள்ளாத வயதில் மனைவிக்கு நிகழ்த்தப்பட்ட சம்பவம் ; 84 வயது கணவனின் கொடூரம் | Shocking Incident Involving Wife

குடும்பத் தகராறு காரணமாக, கணவர் கதவு தாழ்ப்பாளால் தாக்கியதில் இந்த கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், உயிரிழந்த வயேதிப பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்கொலை சம்பவம் தொடர்பாக 84 வயதுடைய சந்தேகநபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அகலவத்தை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.