பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (14) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, மேற்கு மாகாணத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை எச்சரிக்கை மேலும் கூறுகின்றது.

பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Severe Lightning Warning Has Been Issued

அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.  

எனவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.