கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
ஜனவரி 23 முதல் நிலவும் வறண்ட வானிலை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தீவின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை நிலவும்.
அதிகாலையில் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் தரை உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.