மதவாச்சி வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு : விவசாயி உயிரிழப்பு!
அநுராதபுரத்தில் மதவாச்சி - கரம்பன்குளம் வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நேற்று புதன்கிழமை (21) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், உயிரிழந்தவர் மதவாச்சி - துமின்னேகம பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குறித்த விவசாயி துப்பாக்கி சூட்டிற்கு உள்ளாகி காயமடைந்த நிலையில், மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக கொண்டு சென்றபோது, உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உயிரிழந்த விவசாயி கரம்பன்குளம் வனப்பகுதிக்கு அருகில் மருதாணி பயிரிட்டு வந்த நிலையில், விவசாய நோக்கங்களுக்காக வனப்பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருக்கலாம் என இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.