யாசகம் பெற்ற பெண்ணை கொலை செய்த இளைஞன்

யாசகம் பெற்ற பெண்ணை கொலை செய்த இளைஞன்

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துட்டுகெமுனு மாவத்தை பகுதியில் பெண்ணைக் கொலை செய்த சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூர்மையான ஆயுதத்தால் தாக்கி யாசகம் பெற்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் இந்தக் கொலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையை செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபருக்கு 30 வயது வரையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாசகம் பெற்ற பெண்ணை கொலை செய்த இளைஞன் | Beggar Women Killed By A Boy

தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்ததாகத் தெரியவந்துள்ளது, மேலும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.