சி.ஐ.டிக்கு அழைக்கப்படட ஷிராந்தி மற்றும் நாமல்

சி.ஐ.டிக்கு அழைக்கப்படட ஷிராந்தி மற்றும் நாமல்

மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சவுக்கும் அவரது மகன் நாமல் ராஜபக்சவுக்கும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், பெப்ரவரி 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் “சிறிலிய” என்ற பெயரில் பயன்படுத்திய வங்கி கணக்கு தொடர்பில் பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஷிரந்தி ராஜபக்சவுக்கு ஜனவரி 27 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.

சி.ஐ.டிக்கு அழைக்கப்படட ஷிராந்தி மற்றும் நாமல் | Shiranthi Rajapaksa Namal Summoned To Cid

ஆனால் தனிப்பட்ட விடயம் காரணமாக ஷிரந்தி ராஜபக்ச ஜனவரி 27 ஆம் திகதி அன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாவில்லை.

இதனால் பெப்ரவரி 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்சவுக்கும் நாமல் ராஜபக்சவுக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.