சாரதியின் செயல்பாட்டால் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து; உயிர்பிழைத்த 40 பயணிகள்

சாரதியின் செயல்பாட்டால் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து; உயிர்பிழைத்த 40 பயணிகள்

   நுவரெலியா - வலப்பனை, நில்தண்டாஹின்ன பிரதேசத்தில் ஏற்படவிருந்த பாரிய பஸ் விபத்தொன்று சாரதியினால் தவிர்க்கப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இலங்கைப் போக்குவரத்துக் சபைக்குரிய பஸ் வண்டி ஒன்று, நில்தண்டாஹின்ன பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழக்கூடிய ஒரு சூழ்நிலையில்யிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளது.

சாரதியின் செயல்பாட்டால் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து; உயிர்பிழைத்த 40 பயணிகள் | Major Accident Was Averted Due Ctb Driver Actions

இந்நிலையில் பஸ்ஸானது குறிப்பிட்ட வளைவில் திரும்பும்போது ஏற்பட்ட சத்தத்தை அடுத்து பஸ் ஓட்டுநர் பிரேக்கைப் பயன்படுத்தி பஸ் வண்டியை நிறுத்தி விட்டு பஸ்வண்டியின் அடிச்சட்டத்தை இணைக்கும் பிரதான பகுதி உடைந்துள்ளதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து பஸ் வண்டியை இயக்காது அப்படியே வைத்துவிட்டு திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பஸ்வண்டி தொடர்ந்து செலுத்தப்பட்டிருந்தால் ஏற்கனவே மண்சரிவு அபாயத்தில்பாதிக்கப்பட்ட அவ்விடத்தில் மீண்டும் ஒரு பாரிய அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு இருந்துள்ளது.

அச்சமயம் பஸ்வண்டியில் 40 பயணிகள் இருந்துள்ளனர். சாரதியில் துரித நடவடிக்கையால் 40 பயணிகள் மயிரிழையில் உயிர் காப்பாற்றப்பட்டதாகத் தெரிவித்தனர்.