உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் (Biosystems Technology) பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சைகளை பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை 74 பரீட்சை நிலையங்களில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Al Biosystems Technology Practical Exam Date

அனுமதிப்பத்திரங்கள் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக இன்று (02) முதல் அவற்றை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.