பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்தல்:அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்தல்:அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு

இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக திறந்த மற்றும் வரையறுக்கப்பட்ட இரு போட்டித் பரீட்சைகளை நடத்துவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இரு வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது.

2023.02.03 திகதி வரை அரச சேவையில் இணைந்து கொள்ளாத பட்டதாரிகள், தற்போது அரச சேவையில் இருக்கும் பட்டதாரிகளுக்கு இந்தப் போட்டி பரீட்சைகள் நடத்தப்படும் என்று வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளுக்கு நடத்தப்படும் போட்டிப் பரீட்சை, நாடு முழுதுமுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டி பரீட்சை - 2026 என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்தல்:அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு | Competitive Examinations Graduates Teaching

இரண்டாவது போட்டிப் பரீட்சை தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர் வெற்றிடங்களுக்கான இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை - 2023 (2026) என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், இம்மாதம் 20 ஆம் திகதி காலை 9:00 மணி முதல் மார்ச் 05 ஆம் திகதி இரவு 9:00 மணி வரை அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளுக்கு நடத்தப்படும் பரீட்சைக்கு ஒன்லைனில் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்காக இன்று (5.01.2026) காலை 9:00 மணி முதல் 19 ஆம் திகதி இரவு 9:00 மணி வரை ஒன்லைனில் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

2023.02.10 ஆம் திகதிக்கு முன்பு ஒன்லைனில் விண்ணப்பித்த பட்டதாரிகள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அந்த விண்ணப்பங்கள் இந்தத் இந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பித்ததாகக் கருதப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்தல்:அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு | Competitive Examinations Graduates Teaching

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தில் www.doenets.lk என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இரு வர்த்தமானிகளிலும் அறிவிக்கப்பட்டுள்ளன.

போட்டிப் பரீட்சையில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும் என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.