பரீட்சை எழுத காத்திருந்த மாணவி கோடரி தாக்குதலில் பலி

பரீட்சை எழுத காத்திருந்த மாணவி கோடரி தாக்குதலில் பலி

பொலன்னறுவ, தம்பால பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர், கோடரியால் தாக்கப்பட்ட நிலையில் சில நாட்களின் பின்னர் உயிரிழந்ததாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தாண்டு க.பொத.த உயர்தரப் பரீட்சை எழுத காத்திருந்த தம்பல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாத்திமா நஷிமா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி, அவர் பயிற்சி வகுப்பினை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

​​அயல் வீட்டில் வசிக்கும் 26 வயது இளைஞர் ஒருவர் அவரை கோடரியால் தாக்கி காயங்களை ஏற்படுத்தியதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பரீட்சை எழுத காத்திருந்த மாணவி கோடரி தாக்குதலில் பலி | Student Dies In An Axe Attack

படுகாயம் அடைந்த மாணவி பொலநறுவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.