தெங்கு ஏற்றுமதியால் வருமானத்தை குவித்த இலங்கை! வரலாற்றுச் சாதனை
இலங்கையின் தென்னை ஏற்றுமதித்துறை, கடந்த ஆண்டில் 1.2 பில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 43 சதவீத வளர்ச்சியாகும் என இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தேங்காய்ப் பால், தேங்காய் கிரீம் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றிற்கு சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பெரும் கேள்வியே இந்த வளர்ச்சிக்குக் காரணம் என தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் குறிப்பிட்டுள்ளார்.